news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மனைவியின் நடத்தையில் சந்தேகம்
tv

Also Watch

tv

Read this

மனைவியின் நடத்தையில் சந்தேகம்

சங்க்ரூர், பஞ்சாப்

36

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கணவன் - மனைவி இடையே திடீரென ஏற்பட்ட சண்டை. கீழே கிடந்த கோடாரியால் மனைவியின் கழுத்தை பலமுறை வெட்டிக் கொன்ற கணவன். இன்ஸ்டாகிராமில் வீடியோவை பதிவிட்டு கொலைக்கான காரணத்தை கூறி அதிரவைத்த கொடூரன். மனைவி கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?

இன்ஸ்டாகிராமில் வைரலான அதிர்ச்சி வீடியோ
சங்க்ரூர் பகுதியை சேந்த இளைஞர்களும், பெரியவர்களும் செல்போன் யூஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அப்ப இன்ஸ்டாவுல வீடியோ ஒன்னு வைரலாகிருக்கு. அதுல குல்தீப் சிங் என்ற நபர், சட்டை ஃபுல்லா ரத்தக் கரையோட நின்னு, மனைவிய வெட்டிக் கொன்னுட்டதா சொல்லி அதிரவச்சுருக்காரு. இந்த வீடியோவ அடிப்படையா வச்சு போலீசார், வீட்ல இருந்த குல்தீப் சிங்க கஸ்டடியில் எடுத்து விசாரிச்சாங்க.

கணவன் - மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட பிரச்னை
பஞ்சாப்ல உள்ள சங்க்ரூர் பகுதிய சேந்த குல்தீப் சிங்- ஹர்கிரீத் கவுர் தம்பதிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதிக்கு இப்ப மூணு குழந்தைங்க இருக்காங்கன்னு கூறப்படுது. கல்யாணமான புதுசுல கணவன் தன்னோட மனைவி கூடவும் குழந்தைகள் மேலையும் ரொம்ப பாசமா இருந்துருக்காரு. ஆனா அதுக்கடுத்து கணவன் - மனைவிக்கு இடையில அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பிச்சுருக்கு.

Related Link
அண்ணி குடும்பத்தை கறுவறுக்க பிளான்

அண்ணி குடும்பத்தை கறுவறுக்க பிளான்


மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் குல்தீப் சிங்

கணவன் கூலி வேலை செஞ்சுட்டு இருந்தாரு. காலையில வேலைக்கு போனா நைட்டு தான் வீட்டுக்கு வருவராம். கொஞ்சம் நாட்களுக்கு முன்னாடி குல்தீப் சிங் ரொம்ப களைப்போட வீட்டுக்கு வந்துருக்காரு. அப்ப மனைவி கணவனுக்கு சாப்பாடு கூட எடுத்து வைக்காம, யார் கூடவோ பேசிட்டு இருந்துருக்காங்க. இதபாத்து கடும் கோபமான கணவன், யார் கூட இந்த நேரத்துல ஃபோன் பேசிட்டு இருக்க, நீ யார் கூடவும் தொடர்புல இருக்கியான்னு கேட்ருக்காரு. அதுக்கு ஹர்கிரீத், நான் எங்க அம்மா கூட தான் ஃபோன் பேசிட்டு இருந்தேன், நீங்க நினைக்குற மாதிரியெல்லாம் ஒன்னும் கிடையாது, எதுக்கு இப்படி தேவையில்லாம என்ன சந்தேகப்பட்டு என்னைய டாச்சர் பண்றிங்கன்னு கேட்ருக்காங்க. இதனால கணவன் - மனைவிக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. அப்ப கணவன் குல்தீப் சிங் மனைவிய போட்டு அடிச்சுருக்காரு.

மீண்டும் மனைவி ஃபோனில் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரம்
நைட்டு டைம்ல இனிமே யார் கூடவும் பேசாத, யார் கிட்ட பேசுறதா இருந்தாலும், பகல் நேரத்துல மட்டும் பேசிக்கோன்னு சொல்லிருக்காரு கணவன். இதனால அடுத்த கொஞ்சம் நாட்கள் கணவன் மனைவிக்கு இடையில சண்டை இல்லாம இருந்துருக்கு. ஆனா மனைவி மேல நம்பிக்கை வைக்காத கணவன், அப்பப்ப அவங்களுக்கு தெரியாம அவங்களோட செல்போன எடுத்து வாட்ஸ் அப், இன்ஸ்ட்டான்னு செக் பண்ணிக்கிட்டே இருந்துருக்காரு. சம்பவத்தன்னைக்கு வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்பிருக்காரு குல்தீப் சிங். அப்ப மனைவி மறுபடியும் யார் கிட்டயோ ஃபோன்ல பேசிட்டு இருந்துருக்காங்க. இதனால கடும் ஆத்திரமடைஞ்ச கணவன் கையில கிடச்ச பொருட்கள எடுத்து மனைவிய சரமாரியா போட்டு அடிச்சுருக்காரு.

கணவனை கைது செய்து விசாரித்து வரும் போலீஸ்
அப்ப மனைவி, கணவன ஆபாச வார்த்தையால திட்டிருக்காங்க. இதனால கொலை வெறியான கணவன் வீட்ல இருந்த கோடாரிய எடுத்து மனைவிய கழுத்துலையே பல முறை வெட்டிருக்காரு. இதனால சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்த மனைவி உயிரிழந்துட்டாங்க. அதுக்கப்புறம் இன்ஸ்டாவுல ரத்தம் படிஞ்ச சட்டையோட கணவன் வீடியோ ஒன்ன பதிவிட்டுருக்காரு. அதுல என் மனைவி எந்நேரமும் ஃபோனும் கையுமாவே இருந்தா, சொல்லி சொல்லி பார்த்தேன் அவ கேட்குற மாதிரி தெரியல, அதனால அவளக் கழுத்துலையே பலமுறை வெட்டிக் கொன்னு கதைய முடிச்சுட்டேன்னு சொல்லிருக்காரு. இத பார்த்து அந்த ஏரியா மக்கள் எல்லாரும் அதிர்ச்சியாகிட்டாங்க. இந்த வீடியோவ அடிப்படையா வச்சு விசாரணைய மேற்கொண்ட போலீஸ், கணவர் குல்தீப் சிங்க அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
மனைவி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

மனைவி உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு

5
27 mins agoshare
சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved