தமிழ்நாடு

சூலூர், சுல்தான்பேட்டையில் தொடர் கொள்ளை, வழிப்பறி தொடர் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

கோவை சூலூர், சுல்தான்பேட்டை, பாப்பம்பட்டி பகுதிகளில் தொடர் கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த வாரம் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன்,

சந்தேகத்திற்கு இடமாக பைக்கில் வந்த இருவரை விரட்டி பிடிக்க முயன்ற போது,

நடந்து சென்றவர் மீது மோதிய இருவரும் பைக்கை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடினர்.

அதில் காவல் ஆய்வாளர் படுகாயமடைந்த நிலையில், தப்பி ஓடியவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த  அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோபிநாத்தை கைது செய்தனர்.

அவரளித்த தகவலின் பேரில் ஐயப்பன், சிவக்குமாரை கைது செய்தனர்.

இருவரும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தது, செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
 

00 Comments

Leave a comment