தமிழ்நாடு

முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு

முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், களக்காடு
கோட்டத்திற்குட்பட்ட திருக்குறுங்குடி வனச்சரகத்தில் வரும் 20ம் தேதி முதல்
27ம் தேதி வரை 2024-ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் நம்பிகோவில் சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்படுகிறது. திருக்குறுங்குடி
வனச்சரக வன பகுதிகளுக்குள், புலிகள் கணக்கெடுப்பு காலங்களில் கோவில் வழிபாடு,
சுற்றுலா போன்ற எந்த காரணங்களுக்காகவும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட இயலாது
என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் தற்காலிகமாக அனுமதி நிறுத்தி
வைக்கப்படுகிறது என்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் களக்காடு
வனக்கோட்டம் திருக்குறுங்குடி வனச்சரக அலுவலர் யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

00 Comments

Leave a comment