New Project - 2025-05-19T064055
news
பி.எஸ்.எல்.வி சி-61 இல் 3வது கட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு... "3வது கட்ட தோல்வியால் ராக்கெட்டை விண்ணில் ஏவ முடியவில்லை"
மூன்றாவது கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி சி-61 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி சி-61 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த முடியவில்லை என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிஎஸ்எல்வி நான்கு கட்டங்களிலான ராக்கெட் என்றும், நான்கு கட்டங்களும் சரியாக வேலை செய்தால்தான் செயற்கைக்கோளை வெற்றிகரமாக மேலே செலுத்த முடியும் என்றும் விளக்கமளித்த அவர், மூன்றாவது கட்டத்தில் கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

