சாலையில் தாறுமாறாக சென்று பாருக்குள் புகுந்த கார்

சாலையில் தாறுமாறாக சென்ற காரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்ற போது, பாருக்குள் புகுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்,
us car accident
us car accident
Published on: 

புளோரிடாவின் டம்பாவில், சாலையில் தாறுமாறாக சென்ற காரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்ற போது, கார் பாருக்குள் புகுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர். சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற டம்பாவில் (Tampa) ரேஸில் ஈடுபட்ட அந்த கார், ஒய்போர் (Ybor City) நகரத்தை நோக்கி வேகமாக சாலையில் தாறுமாறாக செல்வதை ரோந்து போலீசார் பார்த்தனர். காரை மடக்கி பிடிக்க போலீசார் துரத்திய போது, கார் வணிக நிறுவனத்தில் உள்ள பாருக்குள் புகுந்தது. அப்போது பாருக்கு வெளியே நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

newstamil.tv