National herald
National herald

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கு சோனியா, ராகுல் மீது நடக்கும் சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு..!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், அதன் உரிமையாளரான Associated Journals Limited நிறுவனத்தின் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கைப்பற்ற சோனியாவும் ராகுல் காந்தியும் திட்டமிட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
Published on: 

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் நடக்கும் இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ராஜு, ராகுல் காந்தியும் சோனியாவும் தங்களுக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனம் மூலம்,Associated Journals Limited நிறுவனத்தின் 2000 கோடி ரூபாய் சொத்துகளை தங்களது வசமாக்க திட்டமிட்டதாக தெரிவித்தார்.

newstamil.tv