

வங்கக்கடலில் தீவிரப் புயலாக நிலை கொண்டிருந்த அர்னாப், மிகத் தீவிரப்புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து, மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
ஏனாம் அருகே நாளை கரையை கடக்கும் அர்னாப்
மச்சிலிப்பட்டணத்திற்கு கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ள அர்னாப் மிகத் தீவிரப் புயல் ஆக மாறி உள்ளது.
நாளை முற்பகல் பாபட்லா - விசாகப்பட்டினம் இடையே ஏனாம் அருகே கரையை கடக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
அர்னாப் புயலால் ஆக்ரோஷ அலைகள்
அர்னாப் புயல் தீவிரமாகி வரும் நிலையில் ஆந்திராவில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அலைகளின் வேகம் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.