34
news
பெண்ணை கொலை செய்த வழக்கில் ஜாமினில் வெளிவந்தவன்.. பெண்ணின் கணவர், மாமியாரை கொலை செய்ததால் அதிர்ச்சி
கேரளாவில் பெண்ணை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த நபர், அந்த பெண்ணின் கணவரையும் மாமியாரையும் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பெண்ணை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த நபர், அந்த பெண்ணின் கணவரையும், மாமியாரையும் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்து விட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு உணவருந்த சென்ற கொலையாளியை போலீசார் கைது செய்தனர். பாலக்காடு அடுத்த நென்மாறா பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் செந்தாமரை என்பவன்,
தனது பக்கத்து வீட்டை சேர்ந்த அஜிதா என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்ததால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.
சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த செந்தாமரை, அஜிதாவின் கணவர் சுதாகரன் மற்றும் அவரது மாமியார் லட்சுமி ஆகியோரை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றான்.

