New Project - 2025-05-28T202827
New Project - 2025-05-28T202827

இந்த ஆண்டு புனித ஹஜ் பயண வழிபாடுகள் 4 ஆம் தேதி துவங்குகிறது... துல்ஹஜ் மாத பிறை காணப்பட்டதை தொடர்ந்து சவூதி அரசு அறிவிப்பு

துல்ஹஜ் மாத த்திற்காற பிறை காணப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித பயண வழிபாடுகள் ஜூன் 4 ஆம் தேதி தொடங்குவதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
Published on: 

துல்ஹஜ் மாத த்திற்காற பிறை காணப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித பயண வழிபாடுகள் ஜூன் 4 ஆம் தேதி தொடங்குவதாக சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சவுதி அரசின் ஹஜ் அமைச்சர் தவ்ஃபிக் அல்-ரபியா, ஏற்கனவே உலகம் முழுவதிலுமிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான புனிதப் பயணிகள் மெக்காவிற்கு வந்து விட்டதாகக் தெரிவித்தார்.

இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ் பயணத்தை, முஸ்லீம்கள், வாழ்நாளில் ஒரு முறையாவது மேற்கொள்வதை பெரும்பேறாக கருதுகின்றனர்.

கடந்த ஆண்டு, சுமார் 20 லட்சம் பேர் பேர் ஹஜ்ஜில் பங்கேற்றனர்.

newstamil.tv