வெளியே சொல்ல முடியாத.. அளவுக்கு வரதட்சணை கொடுமை.. கணவர் உட்பட 6 பேரை கொத்தாக தூக்கிய போலீஸ்
வரதட்சணை கேட்டு மருமகளை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்திய கணவர் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாப்பாத்தை சேர்ந்த 27 வயதான இளம்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த வைர வியாபாரியுடன் திருமணம் நடந்து முடிந்தது.
அப்போது, கணவரும், மாமியாரும் 10 லட்சம் ரூபாயும், ஒரு சொகுசு காரையும் வரதட்சணையாக கேட்டதாக தெரிகிறது. இருப்பினும் பெண்ணின் தந்தை 50 லட்சம் மற்றும் இதர பொருட்களையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
ஆனால், தற்போது தங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தனது மாமியார் தனக்கு கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாக வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது தந்தை 3 லட்சம் ரூபாய் மட்டுமே வரதட்சணையாக கொடுத்தாக கூறப்படுகிறது.
இதனால் தாங்கள் கேட்பதை மருமகளின் வீட்டார் தர மறுப்பதால் மது அருந்திவிட்டு மனைவியை கணவர் தாக்குவதாகவும், இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தி வந்தாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்தாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்
இதனையடுத்து, போலீசார் பெண்ணின் கணவர் உட்பட 6 பேர் மீது bns பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர்.

