cm
cm

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தல்

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி...
Published on: 

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி, விரைவாக ஆணையிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், குறுவை நெல் சாகுபடியில் உற்பத்தி அதிகரித்திருப்பதை கருத்தில் கொண்டு, 16 லட்சம் மெட்ரிக் டன் என்ற இலக்கை, கரீஃப் பருவத்தின் கடைசியில் கொள்முதல் செய்யப்படும் மொத்த நெல் அளவிற்கேற்ப உயர்த்தி திருத்தம் செய்திட தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போதுள்ள 25 கிலோ சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்கவும், செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்கி ஆய்வகங்களில் சோதனை நடத்த அனுமதிக்கவும் வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

newstamil.tv