Russia
news
ரஷ்யா அருகே அமெரிக்க நீர்மூழ்கி போர் கப்பல்கள் நிறுத்தம்... அமெரிக்கா உடனான சோவியத் கால அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
ரஷ்யாவுக்கு அருகே அமெரிக்கா தனது நீர்மூழ்கி போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா உடனான சோவியத் கால அமெரிக்க ஆயுத தடை ஒப்பந்த த்தை ரஷ்யா ரத்து செய்துள்ளது.
ரஷ்யாவுக்கு அருகே அமெரிக்கா தனது நீர்மூழ்கி போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா உடனான சோவியத் கால அமெரிக்க ஆயுத தடை ஒப்பந்த த்தை ரஷ்யா ரத்து செய்துள்ளது.
1987 ல் அப்போதைய சோவியத் ஒன்றிய தலைவர் மிகாயில் கோர்ப்பச்சேவுக்கும், அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி 500 கிலோ மீட்டர் முதல் 5,500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்தக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.
ஐரோப்பாவில் ஆணு ஆயுத போர் வெடிப்பதை தடுக்கவும் இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருந்தது.
ஆனால் தற்போது டிரம்பின் பல்வேறு மிரட்டல்களை அடுத்து இந்த ஒப்பந்த த்தில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
