யார் இந்த சண்முகப்பிரியா? அன்பில் மகேஷின் டிரைவர் கொடுத்த துப்பு

400 கோடி ரூபாய் லஞ்ச மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கம்பி எண்ணிக் கொண்டிருக்க, இந்த வழக்கின் அதிரடி திருப்பமாக சென்னை தொழிலதிபர் சண்முகப்பிரியாவின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு சோதனை நடத்தியிருக்கிறது.
சண்முகப்பிரியா
Published on: 

சாதாரண ஜவுளி வியாபாரத்தில் இறங்கி, திடீரென அசுர வளர்ச்சி கண்ட இந்த சண்முகப்பிரியா பின்னணியில் உள்ள மர்மங்கள் என்ன? சண்முகப்பிரியாவுக்கும், அன்பில் மகேஷுக்கும் இடையே என்ன தொடர்பு?

தீவிர விசாரணை
லஞ்ச புகார்நியூஸ்தமிழ்24x7

அன்பில் மகேஷ் கைது

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது எழுந்துள்ள 400 கோடி ரூபாய் லஞ்சப் புகார் விவகாரம் தமிழக அரசியலில் இமாலய பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி கோடிக்கணக்கில் வசூலிக்கப்பட்ட பிரம்மாண்டமான பணம் எங்கு பாய்ந்தது? எந்தெந்த விவிஐபி-களின் லாக்கர்களில் அந்த கோடிகள் கொட்டிக் கிடக்கின்றன? என்ற மணி ட்ரையல் விசாரணை தற்போது அசுர வேகமெடுத்திருக்கிறது.

இடைத்தரகர் முத்துக்குமார்

இந்த சூழலில், காக்கி படை நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் கசிந்துவரும் ஒவ்வொரு தகவலும் அரசியல் வட்டாரத்தை மிரள வைத்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தின் ஒட்டுமொத்த மாஸ்டர் மைண்டாக இருந்து திரைமறைவில் காய்களை நகர்த்தியவர்தான் இடைத்தரகர் முத்துக்குமார். தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் பேசி கோடிக்கணக்கில் பணத்தை கறப்பது, அதை கைமாற்றுவது என அனைத்து நெட்வொர்க்கையும் இயக்கியதே இவர்தான் என்கிறார்கள்.

சண்முகபிரியா
ரெய்டுநியூஸ்தமிழ்24x7

கோடிக்கணக்கில் சொத்து

இந்த விசாரணையின் அடுத்த பாய்ச்சலாகத் தான், சென்னை நீலாங்கரை மற்றும் பெருங்குடியில் உள்ள பிரபல Aphrodite Drapes துணிக்கடையின் உரிமையாளரும், பெண் தொழிலதிபருமான சண்முகப்பிரியாவின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி முடித்திருக்கிறது.

ஆரம்பத்தில், பெருங்குடியில் உள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் மிக சாதாரணமாக வசித்து வந்த இவர், அங்கிருந்து கிரீன்வேஸ் சாலைக்கு மாறி, தற்போது நீலாங்கரையில் யாரும் அசந்துபோகும் அளவுக்கு கோட்டை போன்ற பிரம்மாண்டமான வீட்டில் வசித்து வருகிறார்.

சாதாரண ஆடை வியாபாரம் நடத்தி வந்த இவர், இவ்வளவு குறுகிய காலகட்டத்தில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது எப்படி? இவருக்கும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் இடையே என்ன மாதிரியான ரகசிய வணிக மற்றும் தனிப்பட்ட தொடர்புகள் இருந்தன? என்ற கோணத்தில் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

சண்முகப்பிரியா வாக்குவாதம்

அன்பில் மகேஷின் நிழலாக வலம் வந்ததாக கூறப்படும் ஓட்டுநர் உமாசங்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில்தான் சண்முகப்பிரியாவின் பெயர் விசாரணை வளையத்திற்குள் அதிரடியாக கொண்டு வரப்பட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகங்களிடம் பணம் பெறப்பட்ட விவகாரத்தில் மாஸ்டர் மைண்ட் முத்துக்குமாருடன், சண்முகப்பிரியாவுக்கு நேரடி தொடர்பு இருந்ததாகவும், அந்த முத்துக்குமார் மூலமாகவே அன்பில் மகேஷுடன் அவருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.

பினாமிகள் பெயரில்...
சண்முகப்பிரியாநியூஸ்தமிழ்24x7

நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தியபோது, அன்பில் மகேஷுடன், சண்முகப்பிரியா இருக்கும் புகைப்படங்கள் சிக்கியதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சண்முகப்பிரியா, அன்பில் மகேஷை தனக்கு நன்றாக தெரியும், ஆனால், இந்த முத்துக்குமாரை யாருன்னே எனக்கு தெரியாது என்று மழுப்பல் பதில்களை கூறி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

பினாமிகள் பெயரில்...

தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் இடைத்தரகர்களிடம் இருந்து கறந்து வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான லஞ்ச பணம், முத்துக்குமார் மூலமாக சண்முகப்பிரியாவிடம் பத்திரமாக கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல்கள் கசிய தொடங்கியுள்ளன. அந்த பணத்தை வைத்துத்தான் அவர் தனது ஜவுளி வியாபாரத்தையும் விரிவுபடுத்தியதோடு, பினாமிகள் பெயரிலான பல தொழில்களிலும் கோடிகளை கொட்டி குவித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

தீவிர விசாரணை
சண்முகப்பிரியாநியூஸ்தமிழ்24x7

பள்ளிகளிடம் வசூலிக்கப்பட்ட பிரம்மாண்ட தொகை பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் கட்சி கணக்கிற்கு அனுப்பப்பட்டதா? அல்லது கட்சியின் உச்ச புள்ளிகளின் ரகசிய கல்லாப்பெட்டிகளுக்கு பாய்ந்ததா? என்ற கோணத்திலும் வலையை விரித்துள்ளனர் அதிகாரிகள். பெருங்குடி மற்றும் நீலாங்கரை வீடுகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், பல முக்கிய வங்கி கணக்கு புத்தகங்கள், டிஜிட்டல் பதிவுகள், முதலீட்டு பத்திரங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை போலீசார் அள்ளி சென்றுள்ளார்களாம்.

சண்முகப்பிரியா
அன்பில் மகேஷ் கைது, கொண்டாடினாரா திமுக வழக்கறிஞர்?