ரூ. 13,179 கோடி கூடுதலாக கொடுத்து மின்சாரம் வாங்கியது ஏன்?... கடந்த 3 ஆண்டுகளில் ரூ.41,000 கோடி அளவுக்கு மின் கட்டணம் உயர்வு

தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகி விட்டதாக கூறிக்கொண்டே, ஒரு யூனிட் மின்சாரத்தை 14 ரூபாய் 36 காசுகள் என்ற விலைக்கு 13,179 கோடி ரூபாய்க்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
New Project - 2025-05-19T071037
New Project - 2025-05-19T071037
Published on: 

தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகி விட்டதாக கூறிக்கொண்டே, ஒரு யூனிட் மின்சாரத்தை 14 ரூபாய் 36 காசுகள் என்ற விலைக்கு 13,179 கோடி ரூபாய்க்கு கூடுதலாக மின்சாரம் வாங்கியது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

மின்சாரம் கொள்முதலில் முறைகேடு நடந்திருக்கிறதா? என்பதை கண்டறிய உயர்நீதிமன்றம் மேற்பார்வையில், விசாரணை மேற்கொள்ள திமுக அரசு உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கடந்த மூன்றாண்டுகளில் மின் கட்டணம் பல முறை உயர்த்தப்பட்ட பிறகும் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதற்கு காரணம், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது தான் என குற்றம்சாட்டினார்.

newstamil.tv