23
23

கணவரை சதி செய்து தீர்த்து கட்டிய மனைவி.. போலீசாரை அலறவிட்ட கொலை சம்பவம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை சதி செய்து மனைவி தீர்த்து கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துகொண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு.

இவரது மகன் வெங்கடேசன் ஓய்வு பெற்ற ராணுவ வீரராக உள்ள நிலையில், கடந்த 3 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அவர் சென்ற பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வெங்கடேசன் உயிரிழந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு சந்தேகம் எழவே, இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கள்ளக்காதலுக்கு கணவன் இடையூறாக இருந்ததால் அவரை தீர்த்த கட்ட மனைவி சந்தியா திட்டம் தீட்டியது அம்பலமானது.

அதன்படி சம்பவ தினத்தன்று வெங்கடேசன் பைக்கில் சென்றபோது, இருசக்கர வாகனத்தின், மீது காரை மோதவிட்டு,

பின்னர் இரும்பு ராடால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்தது வெளிச்சத்துக்குவந்தது.

இதனையடுத்து, மனைவி சந்தியா, கள்ளக்காதலன் லோகநாதன், சந்தியாவின் தம்பி சண்முகம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

newstamil.tv