Nilgiris
news
காட்டு யானை தாக்கிய பெண்... அதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கொளப்பள்ளி சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கொளப்பள்ளி சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லியாளம் அம்மங்காவு பகுதியை சேர்ந்த தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளி லட்சுமி என்பவர், அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்தபோது தேயிலை தோட்டத்தில் இருந்த யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டும், கடைகளை அடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
