பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டிற்கு முடிவா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Anbumani Ramadoss
Anbumani Ramadoss
Published on: 

தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இட ஒதுக்கீடு இல்லாமல் தற்காலிக அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அறிவுறித்தியிருப்பது சமூக நீதியை படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும் என கண்டித்துள்ளார்.

பல்கலைக்கழக பேராசிரியர்களை நிரந்தரமாக நியமிக்காமல் ஓய்வு பெற்றவர்களையும், தொழில்துறையினரையும் நியமிக்கும் போது முனைவர் பட்டம் வரை படித்து,

தகுதித் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

newstamil.tv