உலகம்

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுவிப்பு

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுவிப்பு

கத்தார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரில், 7 பேர் தாயகம் திரும்பினர். கத்தாரின் அல் தஹாரா குளோபல் என்ற தனியார் நிறுவனத்துக்காக பணியாற்றி வந்த இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மேல் முறையீடு செய்த நிலையில், மத்திய அரசும் தலையிட்டு கத்தார் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதை தொடர்ந்து மரண தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை இந்தியா அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. துபாயில் கத்தார் அரசரை சந்தித்து பேசிய பிரதமர் மோடியும் இது குறித்து வலியுறுத்தினார். இந்நிலையில் 18 மாதங்களாக சிறையில் வாடிய 8 பேரையும் கத்தார் அரசு விடுவித்தது.

00 Comments

Leave a comment