கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் 90 பேர் புறப்பட்டு சென்றனர். 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். முதற்கட்டமாக கடலூர், திருநெல்வேலி, நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு தலா 30 வீரர்கள் வீதம் 90 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இதையும் படியுங்கள் : அரசியல் கண்ணோட்டத்தோடு சினிமாவை பார்க்க வேண்டாம்