மதுரை சோழவந்தான் அருகே இடப்பிரச்சனை காரணமாக அமைக்கப்பட்டிருந்த வேலியை அதிமுகவை சேர்ந்த நிர்வாகியின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. பேட்டை பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான இடத்தை அதிமுக நிர்வாகி மாரியும் சொந்தம் கொண்டாடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் மாரியின் ஆதரவாளர்கள் வேலியை உடைத்து சேதப்படுத்திய நிலையில், இரண்டு தரப்பையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.