Also Watch
Read this
Posted on: Mar 15, 2026 01:39 PM
By: Manigandan Raja

முறைகேடாக விற்ற நபர்கள் :
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. கூலிதொழிலாளியான இவர் தனது மகளுக்கு 7.50 லட்சம் மதிப்புள்ள 432 சதுர அடி நிலத்தை செல்வி ரவிசந்திரன் என்பவரிடம் கடந்த ஆண்டு வாங்கி உள்ளார்.
பத்திர கிரயம் முடிந்த நிலையில் கூட்டு பட்டாவாக உள்ள இடத்தை தனி பட்டாவாக மாற்ற விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் நில அளவீடு செய்த அதிகாரிகள் இந்த இடம் ஆவணத்தில் நகராட்சி பூங்கா என வகைப்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செல்வி இடம் கேட்ட பொழுது நான் கடந்த 2011-ல் கடையன் என்பவரிடம் வாங்கியதாகவும் ஐந்து பேருக்கு பிறகு இந்த இடம் தனக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசு பூங்கா வகைப்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தை தங்களுக்கு போலியாக விற்பனை செய்திருப்பதாகவும் இதற்காக பத்திரப்பதிவும் பெற்ற நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக நில அபகரிப்பு பிரிவில் புகார் அளிக்க அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலியாக விற்பனை செய்த நபர்கள் மட்டுமல்லாமல் பத்திர எழுத்தர், பத்திரபதிவு அலுவலர் உள்ளிட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆத்தூர் நகராட்சி பூங்காவிற்கு சொந்தமான இடத்தை பத்திர பதிவு செய்து கூட்டு பட்டாவுடன் விற்பனை நடைபெற்ற சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved