Also Watch
Read this
By: Manigandan Raja

சித்திரை திருவிழா 8 ஆம் நாள் :
சென்னை அடுத்த பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெகதாம்பிகை உடனுறை திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் விழா நடைபெறுவது வழக்கம்.கடந்த 23ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8ஆம் நாளான இன்று சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு அலங்கார மண்டபத்திலிருந்து திருவல்லீஸ்வரர் ஜெகதாம்பிகையுடன் தங்க நிற குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோவிலின் நான்குமாட வீதிகளில் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி வீதி உலாவில் ஏராளமான சிவனடியார்கள் பாராயணம் பாட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.