news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews துனிசியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று அசத்தல்
tv

Also Watch

tv

Read this

துனிசியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று அசத்தல்

ஹர்மீத் தேசாய்

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உலக டேபிள் டென்னிஸ்

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் :

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. லண்டனில் நடைபெற்ற போட்டியின் 7-வது பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய ஆண்கள் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 3க்கு 0 என்ற கணக்கில் துனிசியாவை தோற்கடித்தது. தாக்கர், ஹர்மீத் தேசாய் ஆகிய இந்தியர்கள் தங்களது ஆட்டங்களில் இந்தியாவிற்கு வெற்றியை தேடித் தந்தனர்.

செல்சி மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் மில்லி பிரைட் ஓய்வு :

செல்சி மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் மில்லி பிரைட் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செல்சி அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடியுள்ள இவர், 314 போட்டிகளில் விளையாடி 20 கோப்பைகளை வென்றுள்ளார். இதில் 8 மகளிர் சூப்பர் லீக் பட்டங்கள், 6 எஃப்ஏ கோப்பைகள் மற்றும் 4 லீக் கோப்பைகள் ஆகியவை அடங்கும்.

வங்கதேசம் - நியூசிலாந்து போட்டி ரத்து :

வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-க்கு 1 என்ற புள்ளி கணக்கில் வங்கதேசம் கைப்பற்றிய நிலையில், முதல் டி20 போட்டிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், நேற்று சிட்டகாங்கில் நடைபெறவிருந்த 2-வது டி20 போட்டி கனமழையால் ரத்து செய்யப்பட்டது.

முன்னணி வீராங்கனை அரினா சபலென்கா தோல்வி :

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்காவை எதிர்கொண்ட அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட் 2க்கு 6, 6க்கு 2, 7க்கு 6 என கைப்பற்றி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் :

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 4 தங்க பதக்கத்தை வென்றுள்ளது. ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சுனில் சிங்கும், 71 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அபினோப் கோகோய்யும், பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அய்சங்பா கோகோய் மற்றும் ஆண்களுக்கான சீனியர் பிரிவில் இந்திய வீரர் சாரு பேசி பதக்கத்தை வென்றனர்.

ஜாம்பவான்களோடு நேரத்தை செலவிட்ட இஷாந்த் கிசன் :

ஹைதரபாத் அணி வீரர் இஷாந்த் கிசன் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஐஹதரபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி முடிவடைந்ததும் இஷாந்த் கிசன் இருவருடனும் நேரத்தை செலவிட்டார்.

Related Link
விராட் கோலியின் கால்களை தொட்ட மாணவர்

விராட் கோலியின் கால்களை தொட்ட மாணவர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

1
10 hrs 38 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved