உலகம்

நஜ்ஜார் கொலை குற்றச்சாட்டு- அமெரிக்காவிடம் ஆதரவு கோரிய கனடா கனடாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்து விட்டது இந்திய உறவை முறித்துக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை

ாலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு பங்கு உள்ளது என கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ,

இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவு கோரி அமெரிக்காவை நாடியாதாகவும், ஆனால்,

அமெரிக்கா அதற்கு மறுத்து விட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளளது. தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய சக்தியாக விளங்கும் இந்தியாவுடனான உறவை அடுத்த நிலைக்கு பைடன் நிர்வாகம் எடுத்துச் செல்ல முயற்சித்து வரும் நிலையில்,

கனடாவின் கோரிக்கையை ஏற்க முடியாது என வெள்ளை மாளிகை திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

கனடா குடிமகனான நஜ்ஜாரின் கொலை குறித்து கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,

பிரிட்டன் ஆகிய The Five Eyes நாடுகளும், டெல்லி ஜி-20 மாநாட்டின் போது திரைக்கு பின்னால் விவாதித்த தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

00 Comments

Leave a comment