கோவை

சாதிய வன்முறையை தூண்டிவிட்ட ஆசிரியர்? பள்ளி யூனிஃபார்மோடு சடலமான மாணவர்

கோவை பீளமேட்டில் உள்ள கே.கே.நாயுடு பள்ளியில் படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன் அகிலனை, சக மாணவர்கள் சாதி ரீதியாக டார்ச்சர் செய்ததாக கூறப்படும் நிலையில் பட்டியலின மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
Published on: 

‘யார் எல்லாம் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்கள்?’ என வகுப்பு ஆசிரியர் கேட்டதால் தான், சாதிய ஒடுக்குமுறையே பற்றி எரிய ஆரம்பித்ததாகவும், அதனை கண்டிக்க வேண்டிய தலைமை ஆசிரியரோ கண்மூடி வேடிக்கை பார்த்ததாகவும் புகார் எழுந்துள்ள நிலையில் பள்ளி ஆசிரியர் கையில் விலங்கு மாட்டப்பட்டுள்ளது.

பெற்றோர்
பெற்றோர்நியூஸ்தமிழ்24x7

அனைவரும் சமம் தானே...

சாதி பாகுபாட்டை களைந்து, அனைவரும் சமம் என்பதை பறைசாற்றவே பள்ளியில் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை. ஆனால், அதே சீருடையிலேயே தன் உயிரை மாய்க்கும் அளவுக்கு மாணவனை சாதிய பாகுபாடு வருத்தி எடுத்துள்ளது என்பதே வேதனையின் உச்சம்.

கோயம்புத்தூரில்...

கோவை பீளமேடு பகுதியில் உள்ளது கே.கே.நாயுடு அரசு உதவி பெறும் பள்ளி. இதில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார் பட்டியலின சமூகத்தை சேர்ந்த அகிலன் என்ற மாணவன். இவரது தாய் வீட்டு வேலையும், தந்தை அயர்னிங் வேலையும் செய்து வருகிறார்.

அகிலன்
அகிலன்நியூஸ்தமிழ்24x7

இந்நிலையில், தாய் கௌசல்யா வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தபோது பள்ளி யூனிபார்ஃமோடு மாணவன் அகிலன் உயிரை மாய்த்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கத்திக்கதறி உள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான், மாணவனின் முடிவுக்கு பின்னால் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், சில மாணவர்களும்தான் உள்ளனர் என்பதே தெரியவந்தது.

மாட்டுக்கறி சாப்பிடுவீர்களா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு, கல்வி உதவித்தொகை பெறும் பட்டியலின மாணவர்கள் யார்? என்ற விவரத்தை வகுப்பு ஆசிரியரான விஜயகுமார் கேட்டதாக தெரிகிறது. அப்போது, அகிலன் உட்பட சில மாணவர்கள் எழுந்து நின்றதாகவும், அவர்களிடம் ’நீங்கள் எல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்களா?’ என ஆசிரியர் விஜயகுமார் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கு, அகிலனும், மற்ற பட்டியலின மாணவர்களும், ‘ஆமாம்’ என்று தலையாட்ட அதுதான் அகிலன் உயிரையே பறிக்க காரணமாக அமைந்துள்ளது.

பீளமேடு போலீசார்
பீளமேடு போலீசார்நியூஸ்தமிழ்24x7

ஆசிரியரிடம் கூறியும்...

’மாட்டுக்கறி சாப்பிடும் பட்டியலிய மாணவர்களா நீங்கள்? உங்களோடு சேர்ந்துதான் நாங்கள் படிக்கிறோமா?’ என சில மாணவர்கள் அகிலனையும் மற்ற பட்டியலின மாணவர்களையும் தகாத வார்த்தைகளில் திட்டியதாக தெரிகிறது. அதிலும், அகிலனிடம் கூடுதலாகவே வம்பிழுத்துள்ளனர். இதனால், வருத்தமடைந்த அகிலன் ஆசிரியர் விஜயகுமாரிடம் கூறி உள்ளார். ஆனால், அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது.

கண்டுகொள்ளாத தலைமை ஆசிரியர்

இதற்கு மத்தியில் ஒரு கால்குலேட்டருக்காக மாணவர்கள் அடித்துக் கொண்ட பிரச்சினை, தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் சென்றபோது, சாதி ரீதியான டார்ச்சர் குறித்தும் அகிலன் கூறி உள்ளார். அதற்கு, பெயருக்கு சில மாணவர்களை தலைமை ஆசிரியர் திட்டி அனுப்பியதாகவும், மாற்று சமூக மாணவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பள்ளி
பள்ளிநியூஸ்தமிழ்24x7

இதனிடையே, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாணவனின் முன்னேற்ற அறிக்கையில் கையெழுத்திட பள்ளிக்கு வந்த தாய் கௌசல்யா, சம்மந்தப்பட்ட மாணவர்களை கண்டிக்கட்டுமா? என மகன் அகிலனிடம் கேட்டுள்ளார். ஆனால், கேட்டுவிட்டு நீங்கள் சென்றபிறகு தன்னை மீண்டும் சாதிரீதியாக துன்புறுத்துவார்கள் என அச்சமடைந்த மாணவன் தனது தாயை கண்டிக்கவிடாமல் தடுத்துள்ளார்.

அகிலன் தாய் புகார்

இதனால், பள்ளி தலைமை ஆசிரியர் அருண் குமாரிடம் மட்டும் தாய் கௌசல்யா முறையிட்டுள்ளார். அதற்கு, தான் கண்டித்து வைப்பதாககூறி, கௌசல்யாவை அனுப்பி வைத்த தலைமை ஆசிரியர், சம்மந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கண்டிக்கவில்லை என கூறப்படுகிறது.

அகிலன்
அகிலன்நியூஸ்தமிழ்24x7

இந்நிலையில், ஆயுத பூஜை விடுமுறை முடிந்து 4 நாட்களுக்குப்பிறகு பள்ளிக்கு சென்ற அகிலனை, மாற்று சமூகத்தை சேர்ந்த 2 மாணவர்கள் சாதி ரீதியாக காதுகூசும் வார்த்தைகளால் அசிங்கமாக பேசியதாக தெரிகிறது. இதனால்தான், பள்ளி யூனிஃபார்மோடு வந்து மாணவன் உயிரை மாய்த்தார் எனக் கூறப்படுகிறது.

மன உளைச்சலுக்கு...

பல மாணவர்கள் முன்னிலையில் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை கேட்க வேண்டுமா? அப்படியே கேட்டாலும் கல்வி உதவித்தொகைக்கும், மாட்டுக்கறி சாப்பிடுவதற்கும் என்ன சம்மந்தம்? அதனை ஏன் கேட்க வேண்டும்? என கேள்வி எழுப்பும் மாணவனின் பெற்றோர், சாதிகள் இல்லையென கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளியே தனது மகனை சாதிரீதியாக மனஉளைச்சலுக்கு ஆளாக்கி கொ* செய்துவிட்டதாகவும் கண்ணீர் வடித்தனர்.

தாய்
தாய்நியூஸ்தமிழ்24x7

தவமிருந்த பெற்றெடுத்த மகனை சாதிய ஒடுக்குமுறையால் தான் இழந்ததுபோன்று இனி எந்த பெற்றோரும் இழக்கக்கூடாது எனக்கூறிய அகிலனின் பெற்றோர், தற்கொ*க்குக் காரணமான அத்தனைபேரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆசிரியர்கள் மீது வழக்கு

இதனிடையே, கௌசல்யா அளித்த புகாரின்பேரில் வகுப்பு ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண் குமார் மற்றும் அகிலனுடன் படித்த 2 மாணவர்கள் என 4 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சாதிய வன்முறைக்கு காரணமாக இருந்த ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை தேடி வருகின்றனர்.

வழக்கு
வழக்குநியூஸ்தமிழ்24x7

5ஆவதாக ஒரு நபர்

இதுஒருபுறமிருக்க, ஆசிரியர், தலைமை ஆசிரியர், 2 மாணவர்கள் தவிர 5ஆவதாக ஒரு நபர் தற்கொ*க்குப்பின்னால் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள மாணவன் தரப்பு வழக்கிறஞர், அகிலன் பள்ளிக்கு சென்ற காலை 8 மணிக்கு முதல் மதியம் உயிரிழப்பதற்கு முன்புவரை ஏதோ ஒன்று நடந்துள்ளது எனவும் அரை கிலோமீட்டர் தூரமுள்ள எஸ்.ஓ. பங்க் வரை நடந்து சென்ற மாணவர் அதன்பிறகு வேறு எங்கு மாணவர் சென்றார் என்பதும் தெரியவில்லை எனவும் கூறி உள்ளார்.

இதுவும் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

கோவை
"பள்ளிகள் சாதிவெறிக் களமாவதை தடுக்க வேண்டும்"
newstamil.tv