முதல்வர் கதாபாத்திரத்தில் ஹெச்.ராஜா..!

சமூக விழிப்புணர்வை பேசும் ‘செய்! செய்யாதே...
raja 1
raja 1
Published on: 

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘செய்! செய்யாதே!’. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் சுப்புலட்சுமி ஜெயராம் இப்படத்தை தயாரித்துள்ளார். டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, தமிழக முதல்வராக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். டாக்டர் எஸ். ராஜா, குரு விஜய், தர்ஷினி ரெட்டி, பிரதிக்‌ஷா மனோ பிரசாந்த், சிதம்பரம், மவுனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மருத்துவத் துறையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவர் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளுதல் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி பேசுகிறது.

படம் குறித்து இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா கூறுகையில், “தமிழ் சினிமாவில் திறமையிருந்தும் வாய்ப்புக்காக காத்திருக்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான வாய்ப்பை வழங்கி, நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இப்படத்திற்காக அமெரிக்காவில் இருந்து பலமுறை இந்தியா வந்து பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு படத்தை உருவாக்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

newstamil.tv