திமுகவின் பூதக்கண்ணாடி, தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு எச்சரிக்கை

தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதோடு, எந்தச் சூழலிலும் முதலமைச்சர் விஜய்க்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவிடக் கூடாது என்று எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக அரசு
எம்எல்ஏக்கள் கூட்டம் நியூஸ்தமிழ்24x7
Published on: 

எம்எல்ஏக்கள் கூட்டத்தில்...

தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் புதன்கிழமை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க மதியம் 2 மணிக்கே எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்த நிலையில், பிற்பகல் 3.45 மணியளவில் முதலமைச்சர் விஜய் வந்த பின் கூட்டம் தொடங்கியது.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆகியோர் எம்.எல்.ஏ.க்களுக்கு பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். அதிரடி பேச்சுகளுக்கு பெயர் பெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த ஆலோசனை கூட்டத்தில் வழக்கம் போல் அதிரடி காட்டியுள்ளார்.

எம்எல்ஏக்கள்
மாமல்லபுரம்நியூஸ்தமிழ்24x7

சாதாரண பொறுப்பல்ல...

கூட்டத்தில் சுமார் 15 நிமிடம் பேசிய அவர், தவெகவின் அரசியல் வியூகம் என்ன? சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? எதிர்க்கட்சிகளின் அரசியல் நகர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பது குறித்து விளக்கமாக எடுத்து கூறியதோடு, நீங்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்கள், இது சாதாரண பொறுப்பு கிடையாது, மிகப்பெரிய பொறுப்பு என்பதை முதலில் உணர வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாகவும், அவ்வளவு பணம் செலவு செய்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை என்றும், நம்முடைய தலைவர் விஜய் என்ற ஒற்றை முகத்திற்காகத்தான் மக்கள் நம்மை சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், இதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆலோசனை
ஆதவ் அர்ஜூனாநியூஸ்தமிழ்24x7

முதல்வரைப் பாதிக்கும்...

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பொறுப்புகளையும், கடமைகளையும் அறிந்து மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என எடுத்துரைத்ததோடு, சிலர் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுகிறீர்கள் என்றும், நீங்கள் செய்யும் ஒரு சிறிய தவறுகூட உங்களை மட்டுமல்ல, நேரடியாக நம்முடைய முதலமைச்சர் விஜய்யை பாதிக்கும் என எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக பூதக் கண்ணாடி...

நாம் எங்கே தவறு செய்வோம் என்று திமுகவினர் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், உங்களை ஏதாவது ஒரு சிக்கலில் சிக்க வைப்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் அதில் சிக்கி விடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்திருக்கிறீர்கள், உங்களுடைய பொருளாதாரச் சூழலைப் பயன்படுத்தி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று ஆசை காட்டி Money Trap செய்ய முயற்சி செய்யலாம், அதற்கெல்லாம் ஒருபோதும் இரையாகிவிடக் கூடாது என தெரிவித்ததோடு, உங்களுடன் நெருக்கமாகப் பழகும் நண்பர்களே, உங்களை ஏதாவது ஒரு வகையில் தேவையற்ற சிக்கலில் சிக்க வைக்க முயற்சி செய்யலாம் எச்சரிக்கையாக இருங்கள் என அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.

ஆதவ் பேச்சு
தவெக வியூகம்நியூஸ்தமிழ்24x7

ஆட்சி கவிழ்ப்பு சதி

உங்களை கவிழ்ப்பதோடு மட்டுமில்லாமல் நம்முடைய ஆட்சியையே கவிழ்க்க சதி திட்டம் தீட்டுவார்கள். எனவே, யாருடன் பழகுகிறீர்கள், எங்கு செல்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.

எந்த நேரத்திலும், எந்த வகையிலும் உங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தி, அதன் மூலம் நம்முடைய கட்சித் தலைமையையும் முதலமைச்சரையும் தலைகுனிய வைக்க எதிரிகள் முயற்சி செய்யலாம், அவர்களின் சதித்திட்டங்களை விழிப்புடன் இருந்து முறியடிக்க வேண்டும் என ஆதவ் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்சரிக்கை, கண்ணியம்

நீங்கள் செய்யும் மக்கள் பணி உங்களுக்கு மட்டுமல்லாமல், நம்முடைய முதலமைச்சருக்கும், நம்முடைய அரசுக்கும் நற்பெயரைப் பெற்றுத் தரும். எனவே, மக்களின் தேவைகளை அறிந்து சிறப்பாகப் பணியாற்றுங்கள் என்று அறிவுறுத்தியதோடு, முதலமைச்சர் விஜய்யின் பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கண்ணியத்துடனும் செயல்பட வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

திமுக
பூதக்கண்ணாடி நியூஸ்தமிழ்24x7
தவெக அரசு
தவெக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் ஆதவ் கொடுத்த Special Treatment