தவெகவில் அடுத்தடுத்து வெடிக்கும் உட்கட்சி பூசல்

தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து வெடிக்கும் உட்கட்சி பூசல், கட்சி தலைமையை உற்று நோக்க வைத்திருக்கிறது.
உட்கட்சி பூசல்
கோவை தவெகநியூஸ்தமிழ்24x7
Published on: 

மயிலாடுதுறை, காஞ்சிபுரத்தை தொடர்ந்து, கோவை மாவட்ட தவெகவிலும் புதிய நிர்வாகிகளுக்கே பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக சொந்தக் கட்சியினரே கொந்தளிக்கின்றனர். ரசிகர் மன்றம் தொடங்கி கட்சிப் பணி வரை உழைத்த தாங்கள் தொடந்து புறக்கணிக்கப்படுவதாக OG நிர்வாகிகளும், தொண்டர்களும் புலம்பித் தள்ளுகின்றனர்.

அமைச்சர் முன்னிலையில்
மயிலாடுதுறை தவெகநியூஸ்தமிழ்24x7

மோதலுக்கு முக்கிய காரணம்

கடந்த மாதம் மயிலாடுதுறையில் அமைச்சர் வெங்கடரமணன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தவெகவினர் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது சர்ச்சையானது. தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தவெகவிலும் உட்கட்சி பூசல் வெடித்தது.

கட்சியில் புதியதாக இணைந்த நிர்வாகிகளுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும், விஜய் ரசிகர் மன்றம் தொடங்கிய காலத்திலிருந்து உழைத்த தங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சில நிர்வாகிகளும், தொண்டர்களும் வேதனை தெரிவித்து வந்ததே மோதலுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.

கோவை மாவட்டத்திலும்...

தற்போது, கோவை மாவட்ட தவெகவிலும் உட்கட்சி பூசல் வெடித்திருப்பது கட்சி தலைமையை உற்று நோக்க வைத்திருக்கிறது. வால்பாறை சட்டமன்ற தொகுதி தவெக பொறுப்பாளர் கிரீசுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆனைமலை அருகே உள்ள தென் சங்கம்பாளையம் பகுதியில் தவெக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய வால்பாறை தொகுதி பொறுப்பாளர் கிரீஷ் அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது கிரீஷ் காரை மறித்த தவெகவினர் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும், கட்சி தொடங்கியது முதலே பயணித்து வரும் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்படதில்லை எனக் கூறி காரின் முன் படுத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

உட்கட்சி பூசல்
தவெகவினர் வேதனை நியூஸ்தமிழ்24x7

சாலையில் அமர்ந்து கோஷம்

தொடர்ந்து கட்சி நிகழ்ச்சி முதல் புதிய நிர்வாகிகள் நியமனம் வரை தங்களுக்கு வேண்டியவர்களுக்கே கிரீஸ் முன்னுரிமை கொடுப்பதாக குற்றம் சாட்டிய தவெகவினர், சாலையில் அமர்ந்து, ‘கிரீஷ் ஒழிக கிரீஷ் ஒழிக,’ என கோஷமிட்டனர்.

தொடர்ந்து, கிரீசிடமிருந்து தவெக பொறுப்பாளர் பதவியை பறிக்க வேண்டுமென தொண்டர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து அங்கு வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அனுப்பி வைத்தனர்.

கோவை தவெக
காரை மறித்து கோஷம்நியூஸ்தமிழ்24x7

சட்டமன்ற தேர்தலுக்கு முன், பூத் ஏஜெண்ட் முதல் கிளை நிர்வாகிகள் வரை தவெகவில் உட்கட்டமைப்பே இல்லை என பல்வேறு கட்சியினரும் விமர்சித்து வந்தனர். ஆனால், தற்போது தவெக ஆளுங்கட்சியாக உருவெடுத்த பின்னர் முன்னாள் அமைச்சர்கள் முதல் முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இணைந்தும் உட்கட்சி பூசல் தொடர்கதையாகி வருவது பனையூரை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

தவெக
தவெக பொறுப்பாளர் நியூஸ்தமிழ்24x7
உட்கட்சி பூசல்
CM விஜய்க்கு வந்த புதிய அதிர்ச்சி?