கைதாகிறாரா கே.என்.நேரு? திமுகவை உலுக்கும் ரெய்டு புயல்

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் திமுகவினர் மீளாத நிலையில், அடுத்த குறியாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
கே.என்.நேரு
Published on: 

நகராட்சி நிர்வாக துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 600 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு, முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சோதனைக்கு மேல் சோதனையாக மாறியிருக்க, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கே.என்.நேரு, அன்பில்மகேஷ்
ரெய்டு புயல்நியூஸ்தமிழ்24x7

திருச்சி தளபதிகள்...

திருச்சி திமுகவின் தளபதிகளாக இருக்கும் அன்பில் மகேஷ், கே.என்.நேருவுக்கு இது போதாக்காலம் போல. இரு நாட்களுக்கு முன்பு தான் தனியார் பள்ளிகளிடம் இருந்து 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய

வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

திமுக தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட அன்பில் மகேஷின் கைது, திமுக முகாமில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்க, அடுத்தபடியாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை டார்கெட் செய்து ரெய்டு நடைபெற்றது.

ரூ.1,020 கோடி லாபம்...

அதாவது, 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு, அந்த துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப பல கோடி ரூபாய்

லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை திமுக ஆட்சியிலேயே டிஜிபிக்கு கடிதம் எழுதியது.

எந்தெந்த பணியிடங்களுக்கு எவ்வளவு வசூல் செய்யப்பட்டது? யார் யார் பணம் வசூல் செய்தது? என்பதோடு, சில வாட்ஸ் அப் உரையாடல் ஆதாரங்களும் அமலாக்கத்துறை கையில் சிக்கியிருந்தது.

இருப்பினும், ED கடிதம் கிடப்பிலேயே கிடக்க, நகராட்சி நிர்வாகத் துறையில் டெண்டர் முறைகேட்டில் 1020 கோடி ரூபாய் லாபம் பார்த்ததாக கே.என்.நேரு மீது குற்றம்சாட்டி அடுத்த கடிதத்தை அனுப்பியது அமலாக்கத்துறை.

அமலாக்கத்துறை
லஞ்சம் உரையாடல்நியூஸ்தமிழ்24x7

உச்சநீதிமன்றம் வரை

இரு கடிதத்தின் மீதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அதிமுக எம்.பி., இன்பதுரை நீதிமன்றத்தை நாடினார். கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என இன்பதுரை நீதிமன்றம் சென்ற நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு மேல் முறையீடு செய்ய, தனி நீதிபதி உத்தரவை தலைமை நீதிபதி அமர்வு உறுதி செய்தது. உயர்நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவு கிடைக்காததால், உச்சநீதிமன்றம் சென்றார் கே.என்.நேரு.

ஆனால், உச்சநீதிமன்றமும் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய எந்த தடையும் இல்லை எனக் கூறி கைவிரித்து விட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தான் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. திருச்சியில் கே.என்.நேருவின் தில்லை நகர் வீட்டில் சோதனை நடந்தது. கடந்த மாதம் 5ஆம் தேதியும் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது.

அதேபோல, சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது. TRUE VALUE HOMES என்ற பெயரில் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் ரவிச்சந்திரன் தான் கே.என்.நேருவுக்கு வலது கரம், இடது கரம்.

கைதாக வாய்ப்பு?
கே.என்.நேருநியூஸ்தமிழ்24x7

கே.என்.நேரு கைது?

TRUE VALUE HOMES கட்டுமான நிறுவனம் மூலம் லஞ்ச பணம் வசூலிப்பது உள்ளிட்ட பல முறைகேடுகள் அரங்கேறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்ட

நிலையில், சோதனை இன்னும் தீவிரமடைந்துள்ளது. கோவையிலும் கே.என்.நேரு தொடர்புடைய 2 இடங்களை ரெய்டு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது லஞ்ச ஒழிப்புத் துறை.

வழக்கில் இருந்து தப்பிக்க கே.என்.நேரு எடுத்த முயற்சி பலன் கொடுக்காமல் போன நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை மீண்டும் ரெய்டு நடத்தி வருகிறது.

சோதனையின் நிறைவில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு லஞ்ச ஒழிப்பு போலீசால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்

கசிந்துள்ளது. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் சில திமுக நிர்வாகிகள் வீட்டிலும் ரெய்டு உற்சவம் நடந்து வருகிறது. திருச்சி துறையூரில் திமுக நகர செயலாளர் முரளி வீட்டில் பொருளாதார

குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தும் நிலையில், நாமக்கல் திமுகவின் முகமாக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ., மோகனூர் ராமலிங்கம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கே.என்.நேரு
ராமலிங்கம்நியூஸ்தமிழ்24x7

ராமலிங்கத்தின் வீடு, கட்டுமான நிறுவனம் உள்பட 4 இடங்கள் லஞ்ச ஒழிப்பு போலீசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல, வேலூர் திமுகவில் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக திமுகவின் முக்கிய நபராக வலம் வரும் நந்தக்குமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் புகுந்திருக்கிறது.