19
அரசியல்
திமுக ஆட்சியில் 24க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள்..
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் ஊழியர் மரணமடைந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமாரை 24மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தாதது ஏன்? நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் இதுவரை 24க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதனை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா என்றும் கேள்வி எழுப்பினார்.