எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலை - முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை

மாமல்லபுரத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகள் விரிக்கும் சதி வலையில் சிக்கி விடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலை - முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை
Published on: 

சர்ச்சையில் சிக்கிய 2 எம்.எல்.ஏ.க்களை எச்சரித்து அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பேசியது என்ன?

தவெக ஆட்சி அமைந்து...

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

மாமல்லபுரம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் தனித்தனியாக பேசிய முதலமைச்சர் விஜய், அவர்களின் கோரிக்கையை கேட்டறிந்ததோடு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

நிறைய எதிரிகள் உள்ளதால்...

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெண் எம்எல்ஏக்கள் மட்டும் விடுதியில் இருந்து புறப்பட்டனர். முதலில் அவர்களிடம் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில் அவர்கள் புறப்பட்டனர்.

தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், நம் கூட்டணியில் உள்ளவர்களை தவிர நமக்கு எதிர்க்கட்சிகள் அதிகமாக உள்ளதாகவும், நிறைய எதிரிகள் உள்ளதால் எந்த ட்ராப்பிலும் சிக்காமல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்

மேலும், திசை மாறி சென்றுவிடாதீர்கள், தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்ததோடு, எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் தனது கவனத்திற்கு கொண்டு வாருங்கள் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என்று தெரிவித்ததோடு, தன்னை யாராவது பார்க்கவிடாமல் உங்களை தடுக்கிறார்களா? என்று கேள்வி கேட்டார்.

கடுமையாக எச்சரித்து...

தொகுதியில் உள்ள அதிகாரிகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்த புகார், அவர்களின் பெயர் மற்றும் பணியை தனது டைரியில் முதலமைச்சர் எழுதி வைத்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏக்களிடம் தனித்தனியாக பேசிய முதலமைச்சர், சர்ச்சையில் சிக்கிய துறையூர் எம்.எல்.ஏ. ரவிசங்கர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷிடம் கூடுதல் நேரம் பேசியதோடு, சர்ச்சை குறித்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக, ஆலோசனை கூட்டத்தை முடித்து கொண்டு காரில் வெளியே வந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் செய்தியாளர்களை பார்த்ததும் முகத்தை மூடிக்கொண்டு சென்றார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு தீபாவளி வாழ்த்து

முன்னதாக தவெக எம்.எல்.ஏக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்து கொண்ட முதலமைச்சர் விஜய், பட்டு வேட்டி, சேலையை பரிசாக வழங்கினார்.

எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலை - முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை
கையில் ரகசிய Report - MLAக்களை வேறு விதமாக Treat செய்த CM விஜய்