1
1

திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்.. RTE திட்டத்திற்கான நிதியை ஒதுக்காதது ஏன்? - இபிஎஸ்

கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை செலுத்தாதது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
Published on: 

கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை செலுத்தாதது ஏன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி உரிமை திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவையை திமுக அரசு முடக்கி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சுயபுராணங்களை பாடுவதிலேயே தான் தீவிரமாக உள்ளதாகவும், உடனடியாக கட்டாய கல்வி உரிமை திட்டத்தை முழுமையாக முறையாக செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

newstamil.tv