முறைகேடுகளை தட்டிக் கேட்ட பேராசிரியர் பணியிடை நீக்கம் "பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரின் பழிவாங்கும் செயல்"

”முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்த பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
6
6
Published on: 

”முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்த பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திங்கள்கிழமை பதவியில் இருந்து ஓய்வு பெறவிருக்கும் நிலையில், தமக்கு பிடிக்காதவர்களையும், கடந்த காலங்களில் தமது தவறுகளை விமர்சித்தவர்களையும் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கும் செயலில் துணை வேந்தர் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

துணை வேந்தரின் பழிவாங்கும் செயலும், அதை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என்று ராமதாஸ் குறிப்பிட்டார்.

newstamil.tv