"எல்லை மீறும் தவெகவினர் அடாவடித்தனம்" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை தவெகவினர் நடத்தும் கூத்து வெட்கக்கேடானது என இபிஎஸ் சாடி உள்ளார். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியினரின் அடாவடித்தனம் எல்லை மீறி செல்வதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
"எல்லை மீறும் தவெகவினர் அடாவடித்தனம்" - எடப்பாடி பழனிசாமி  குற்றச்சாட்டு
Published on: 

தவெகவினர் கூத்து வெட்கக்கேடானது - இபிஎஸ்

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூறியதாவது;

பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட விவகாரம் கண்டனத்திற்குரியது. அதிகாரிகள் அரசின் ஒப்புதலின் அடிப்படையில் தான் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் எல்லை மீறி அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பாலியல் தொடர்பான செய்திகள் வராத நாளே இல்லை, அந்த அளவிற்கு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது.

பொது மக்களை சந்தித்தால் தான்...

முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்றே தெரியவில்லை, பொது வெளியில் வந்து மக்களைச் சந்தித்தால்தான் அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பது முதலமைச்சருக்குத் தெரியவரும்.

தமிழக மக்களின் பிரதான பிரச்சினையாக காவிரி நீர் விவகாரம் இருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழக முதலமைச்சர் உரிய முறையில் குரல் கொடுத்து எடுத்துரைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார்.

அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரே கட்சியாக இருக்கும் நிலையில், தமிழகத்திற்கு மட்டும் ஏன் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது?

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வீடியோவைக் காண...

"எல்லை மீறும் தவெகவினர் அடாவடித்தனம்" - எடப்பாடி பழனிசாமி  குற்றச்சாட்டு
தவெக நிர்வாகிகள் செய்கின்ற கூத்து வெட்கக்கேடானது - இபிஎஸ் விளாசல்