42
42

குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Published on: 

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி பாசன மாவட்ட உழவர்களின் நலனில் தமிழக அரசு அக்கறையின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் கடந்த ஆண்டைப் போல ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் குறுவைத் தொகுப்பு உதவிகள் வழங்கப்படும் என்று இலக்கு நிர்ணயிக்காமல், அனைத்து உழவர்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தெலங்கானாவில் வழங்கப்படுவதைப் போன்று ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் ஊக்குவிப்பு மானியமும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

newstamil.tv