6
அரசியல்
"சுபாஷினி வெளியிட்ட வீடியோவில் அச்சுறுத்தல் தெரிகிறது"
சுபாஷினி வெளியிட்ட வீடியோ யாருடைய கட்டுப்பாட்டிலோ இருந்துகொண்டு அச்சுறுத்தலின் காரணமாக பதிவிட்டுள்ளதாக தெரிவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
சுபாஷினி வெளியிட்ட வீடியோ யாருடைய கட்டுப்பாட்டிலோ இருந்துகொண்டு அச்சுறுத்தலின் காரணமாக பதிவிட்டுள்ளதாக தெரிவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயாரையும் கைது செய்வதோடு, இந்த கொலையில் வேறு யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை போலீஸார் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
மேலும், தென் மாவட்டங்களில் அரங்கேறிய அத்தனை கொலைகளுக்கு பின்னணியிலும் கூலிப்படையின் கைவரிசை இருப்பதால், கூலிப்படையினர் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்றார்.
