ரூ.160 கோடியில் எம்பெருமானுக்கு காணிக்கை, மெய் சிலிர்க்க வைத்த தொழிலதிபர்

நினைத்த காரியம் கை கூடியதாக கூறி திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
ரூ.160 கோடியில் எம்பெருமானுக்கு காணிக்கை, மெய் சிலிர்க்க வைத்த தொழிலதிபர்
Published on: 

நினைத்த காரியங்கள் நல்லபடியாக கை கூடினால், மனமுருகி வேண்டிய கடவுளுக்கு பணமோ, நகையோ, விலையுயர்ந்த பொருட்களோ பக்தர்கள் காணிக்கையாக கொடுப்பது வழக்கம். இதில் ஒருபடி மேலேபோய் தொழிலதிபர் ஒருவர் நினைத்த காரியம் கை கூடியதாக கூறி திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

ரூ.160 கோடியில் எம்பெருமானுக்கு காணிக்கை, மெய் சிலிர்க்க வைத்த தொழிலதிபர்
திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க நகை நன்கொடை

வெளிநாடு வாழ் தமிழக தொழிலதிபர்

தமிழகத்தை சேர்ந்த வெளிநாடுவாழ் தொழிலதிபர் வர்தமான் என்பவர், வெளிநாடுகளில் தொழில் நிறுவனம் தொடங்க திட்டமிருந்தார். தொழில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டினால், அதில் ஒரு பகுதியை எம்பெருமான் ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

நினைத்தது போலவே வர்தமானின் தொழில் நிறுவனம் நன்கு வளர்ச்சியடைந்து 7,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.

ஏழுமலையானுக்கு காணிக்கை

விரும்பி வேண்டியது நிறைவேறவே, திட்டமிட்டதுபோல திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்த முடிவெடுத்தார் வர்தமான். தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வழிகாட்டுதலின் மூலம் தேவஸ்தான நிர்வாகிகளை சந்தித்து தன்னுடைய விருப்பங்களை தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

தேவஸ்தான நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் பேரில் 121 கிலோ தங்கத்தை பயன்படுத்தி 45 வகையான திருவாவரணங்கள் தயார் செய்து அவற்றை ஒன்பது செட்டுகளாக தயார் செய்திருந்தார் வர்தமான்.

தங்க ஆபரணங்கள்...

ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கண்டெய்னர் மூலம் திருமலை கொண்டு வரப்பட்டது. ஏழுமலையானை அலங்கரிக்கும் தங்க கிரீடம், தங்க கால் பாதம், தங்க நெக்லஸ் உள்ளிட்ட ஆபரணங்கள் அடங்கிய பெட்டிகளை தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைத்தார் வர்தமான்.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தேவஸ்தான அதிகாரி திருவாரணங்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து விஐபி பிரேக் தரிசனத்தில் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை வர்தமான் மனமுருகி வேண்டினார். எம்பெருமானுக்கு தங்க ஆபரணங்களை வழங்கிய தொழிலதிபருக்கு சால்வை அணிவித்தும், அட்சதை தூவியும் தேவஸ்தான நிர்வாகிகள் கௌரவப்படுத்தினர்.

வீடியோவில் காணலாம்

ரூ.160 கோடியில் எம்பெருமானுக்கு காணிக்கை, மெய் சிலிர்க்க வைத்த தொழிலதிபர்
ரூ.160 கோடியில், 121 கிலோ தங்கத்தில் ஜொலிக்கப்போகும் ஏழுமலையான்