14-ஆவது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்

தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதி வரைக்கும் முன்னேறிய இந்திய அணிக்கு, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hockey
Hockey
Published on: 

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, 7 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஜெர்மனியை எதிர்கொள்கிறது. சென்னையில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு அரையிறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இத்தொடரில் தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதி வரைக்கும் முன்னேறிய இந்திய அணிக்கு, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstamil.tv