விளையாட்டு
2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி
இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கின் இரட்டை சதம் வீண்
Summary
2 விக்கெட்கள் வித்தியாசத்தில் இலங்கை த்ரில் வெற்றி இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கின் இரட்டை சதம் வீண்
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 429 ரன்கள் எடுத்தது. அணியின் கேப்டன் ஹாரி புரூக் 202 ரன்கள் குவித்தார்.
430 ரன்கள் என்கிற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் திணறினாலும், பின்னார் சுதாரித்துக் கொண்டு அதிரடி காட்டியது.
முடிவில், 49.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

