u17 football world cup
u17 football world cup

17 வயதினருக்கான 20-ஆவது உலகக்கோப்பை கால்பந்து போட்டி

இறுதி ஆட்டத்தில் 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர்ந்தது.
Published on: 

17-வது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ((யு17)) 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்தில் 1-க்கு 0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சி முகர்ந்தது. போர்ச்சுகல் வீரர் அனிசியோ காப்ரல் 32-வது நிமிடத்தில் அடித்த கோல் வெற்றியை தீர்மானித்தது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான பிரேசிலை 2-க்கு 4 என்ற பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி 3-வது இடத்தை இத்தாலி தனதாக்கியது.

newstamil.tv