World cup kabadi
World cup kabadi

2-வது மகளிர் உலகக் கோப்பை கபடி தொடர்

இரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று பட்டத்தை இந்திய அணி தக்க வைத்து கொள்ளுமா?
Published on: 

2-வது மகளிர் உலகக் கோப்பை கபடி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. டாக்காவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இறுதியில், 33-21 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சீன தைபே அணி வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று பட்டத்தை இந்திய அணி தக்க வைத்து கொள்ளுமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

newstamil.tv