IND Match
விளையாட்டு
இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையே 4வது டி20 போட்டி
பனி மூட்டம் குறையாததால் போட்டி ரத்து செயப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி கடும் பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற இருந்தது. இதனிடையே லக்னோவில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. சில மணி நேரங்கள் காத்திருந்து நடுவர்கள் ஆய்வு செய்த நிலையில், பனி மூட்டம் குறையாததால் போட்டி ரத்து செயப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
