

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இத்தாலியில் உள்ள டூரின் நகரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் மோதினார்.
முதல் செட்டை 3-க்கு 6 என இழந்த அல்காரஸ், அதிரடியாக விளையாடி அடுத்த இரு செட்களையும் 6-க்கு 3, 7-க்கு 6 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.