

ODI-பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவாலான வடிவம்
ஒருநாள் கிரிக்கெட்தான் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவாலான வடிவம் என இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப பேட்டிங்கின் வேகத்தை தொடர்ந்து மாற்ற வேண்டும் என்றும், ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி, பின்னர் அதிரடியாக ரன்களை குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் எதிர்பார்த்த அளவுக்கு உழைக்காதது தனக்கு ஏமாற்றம் என்றும் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.
மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப்போட்டி
மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால், பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது. இதில் அர்ஜென்டினா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2002, 2010-க்குப் பிறகு 3-வது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது.