

CSK பயிற்சியாளர்கள் குழுவில் அதிரடி மாற்றத்தை செய்த சிஎஸ்கே கூண்டோடு மாற்றிவிட்டு புதிய பயிற்சியாளர்கள் குழு நியமனம்
ஐபிஎல் சீசனில் 3 ஆண்டுகள் தொடர் தோல்வியை தொடர்ந்து, 2027 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
18 ஆண்டுகள் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் விலகியதை தொடர்ந்து, மைக் ஹஸ்ஸி, எரிக் சைமன்ஸ், ராஜீவ் குமார், கிரெக் கிங் ஆகியோருடனான உறவை சிஎஸ்கே முறித்துக் கொண்டது.
புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான், உதவி மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக கரேத் பத்தி, பந்துவீச்சு பயிற்சியாளராக மொகித் சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக இங்கிலாந்து சர்ரே அணியின் பயிற்சியாளராக இருந்த கரேத் பத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே சர்ரே அணிக்காக விளையாடிய இவர், ஓய்வு பெற்றதும் 2021-ம் ஆண்டு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு, 2022 முதல் 2024 வரை தொடர்ந்து 3 முறை சர்ரே கவுன்ட்டி சாம்பியன் பட்டம் வென்றது. 2025-ல் 2-வது இடம் பிடித்தது. இவர், 21 வருடங்களாக சர்ரே அணியுடன் பயணம் செய்துள்ளார்.