

அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகிறார்.
மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டிசம்பர் 11ஆம் தேதி மெஸ்ஸி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
மும்பை வரும் மெஸ்ஸி, தோனி, கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.