Geri christen
விளையாட்டு
நமீபியா கிரிக்கெட் அணியின் ஆலோசகராக கேரி கிறிஸ்டன் நியமனம்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அணியை தயார்படுத்த வேண்டிய தேவை உள்ளது
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன், நமீபியா கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. நமீபியா கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதை கௌரவமாக கருதுவதாகவும் கேரி கிறிஸ்டன் கூறினார். நமீபியா அணி மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி வருவதாகவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அணியை தயார்படுத்த வேண்டிய தேவை உள்ளது எனவும் கேரி கிறிஸ்டன் கூறினார்.
