

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்குப் பதிலாக மாற்று பயிற்சியாளரை பிசிசிஐ தேடுவதாக தகவல் கூறப்படுகிறது. அவரது வருகைக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மனை பிசிசிஐஅதிகாரபூர்வமற்ற முறையில் அணுகியதாக கூறப்படுகிறது.