

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு ஐசிசி தண்டனை குர்னூர் பிராருக்கு ஒரு தகுதி குறைப்பு புள்ளியை வழங்கியது நியூசிலாந்து வீரரை அவுட் செய்ததை ஓவராக கொண்டாடினார்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிராருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு தகுதிக் குறைப்பு புள்ளியை வழங்கி தண்டித்துள்ளது.
கடந்த 24 மாதங்களில் அவர் பெறும் 2-வது தகுதி குறைப்பு புள்ளி இது. இந்தியா - நியூசிலாந்து இடையே கடந்த 13-ம் தேதி நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் டிம் செய்ஃபெர்ட் விக்கெட்டை வீழ்த்திய குர்னூர் பிரார், அவருக்கு மிக அருகில் சென்று ஆக்ரோஷமாக சைகை செய்ததுடன், சில வார்த்தைகளையும் கூறியதால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.