

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடரில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
லக்னோவில் நடைபெற்ற போட்டியில் உக்ரைனின் யேஹினிலா - புரோவா ஜோடியை எதிர்கொண்ட இந்திய ஜோடி, 13-க்கு 21, 21-க்கு 10, 21-க்கு 12 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. அதேபோல, பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் உன்னதி ஹூடாவை வீழ்த்தி தன்வி ஷர்மா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.